மாவட்ட தலைநகரமான காஞ்சி புரத்தில் 43 ஆண்டுகளுக்கு பிறகு போக்குவரத்து ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 1972-ம் ஆண்டில் முதல் முறையாக காஞ்சி புரம் நகரத்தில் ஒரு உதவி ஆய் வாளர் மற்றும் 10 இதர போலீ ஸார் எண்ணிக்கையுடன் போக்கு வரத்து காவல் நிலையம் தொடங் கப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஸ்ரீபெரும் புதூர், மறைமலைநகர், கூடுவாஞ் சேரி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய இடங் களில் போக்குவரத்து காவல்நிலை யங்கள் ஆய்வாளர் தலைமையில் இயங்கி வருகின்றன. ஆனால் மாவட்ட தலைநகரான காஞ்சி புரத்தில் போக்குவரத்து காவல் நிலையம் இருந்தும் அதில் போக்கு வரத்து ஆய்வாளர் பல ஆண்டு களாக நியமிக்கப்படவில்லை.
காஞ்சிபுரம் நகரத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித் துக்கொண்டே வருகிறது. இதை சீரமைக்கும் வகையில் மேம்பாலம், சுரங்கப்பாதை போன்றவை அமைக்கப்பட்டால், பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோயிலின் தேரோட்டம் பாதிக்கப்படும் என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் நகரத்தில் கடந்த 1971-ம் ஆண்டு 1,10,657-ஆக இருந்த மக்கள் தொகை, 2011-ல் 2,32,816-ஆக உயர்ந்துள்ளது. திரு வண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள தனி யார் பள்ளிகள், பொறியியல் கல் லூரிகள் ஆகியவற்றின் பேருந்து கள் காஞ்சி நகருக்குள் வந்து செல்கின்றன. பெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதியில் பன்னாட்டு தொழிற்சாலைகள் பல வந்துவிட்ட நிலையில் அதன் வாகனங்களும் தொழிலாளர் களை ஏற்றிச் செல்ல காஞ்சிபுரம் வந்து செல்கின்றன. மேலும் அந்நிறு வனங்களில் வேலை செய்யும் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு தங்குமிடமாகவும், போக்குவரத்து இணைப்பு நகரமாகவும் காஞ்சி புரம் விளங்குகிறது. இதனால் நகரப் பகுதியில் கடந்த 1972-ம் ஆண்டு இருந்ததைவிட சாலை போக்குவரத்து தற்போது பல மடங்கு அதிகரித்து காணப் படுகிறது.
காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு என தனி ஆய்வாளர் நியமிக்கப்படாத நிலையில், போக்குவரத்து போலீ ஸார் அந்தந்த சட்டம் ஒழுங்கு எல்லைக்கு உட்பட்ட காவல்நிலைய ஆய்வாளரின் கீழ் பணிபுரிந்தனர். போக்குவரத்து விதிமீறல் குறித்த புகாரை சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் போக்குவரத்து போலீஸார் ஒப்படைத்துவிடுவர். தற்போது உடனடி அபராதம் விதிக்கும் முறை தமிழகம் முழுவதும் அமல் படுத்தப்பட்டது. இதற்கான ரசீதுகளில் போக்குவரத்து ஆய்வாளர் கையொப்பமிட வேண்டும். காஞ்சிபுரத்தில் போக்கு வரத்து ஆய்வாளர் இல்லாததால் சட்டம் ஒழுங்கு காவல்நிலைய ஆய்வாளரிடம் முன்கூட்டியே ரசீதுகளில் கையெழுத்து பெற்று போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலித்து வந்தனர்.
போக்குவரத்து ஆய்வாளர் இல்லாததால், போக்குவரத்து தொடர்பான நீதிமன்ற வழக்கு கள், போக்குவரத்து மாற்றம் தொடர்பாக முடிவெடுப்பது மற்றும் அலுவலக ரீதியாக பல்வேறு முடிவுகளை எடுப்பது ஆகிய பணிகளில் சிக்கல் ஏற்பட்டது. விழா காலங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் முக்கிய நாள் களில் கூடுதல் பணியாக மதுராந்தகம் போக்குவரத்து ஆய்வாளர், காஞ்சிபுரம் போக்கு வரத்தை சரி செய்து வந்தார். இந்நிலையில் மாவட்ட தலை நகராக உள்ள காஞ்சிபுரத்தில் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு என தனி ஆய்வாளர் நியமிக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
முதல்வர் உத்தரவு
கடந்த ஆண்டு நடை பெற்ற மாவட்ட ஆட்சி யர்கள் மற்றும் காவல் கண்காணிப் பாளர்களுடனான மாநாட்டில், காஞ்சிபுரம் எஸ்.பி. விஜயகுமாரன் கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு ஆய்வாளரை நியமிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை 16ம் தேதி ஆய்வாளர் நடராஜ், காஞ்சிபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பொறுப் பேற்றுக்கொண்டார். பொறுப் பேற்ற முதல் நாளிலேயே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இருந்து ரூ.1 லட்சம் அபராதமும் வசூலித்தார். இந்த நியமனத்தால் 43 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் நகர போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.