தமிழகம்

ஜல்லிக்கட்டு தடை பின்னணியில் அரசியல்: சீமான் கருத்து

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது: ஜல்லிக்கட்டு தமிழரின் உயிரோடு கலந்த மரபு. உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் தற்சார்பு பொருளா தாரம், உற்பத்தி பொருளாதாரம் ஆகிய இருவகை உள்ளது. ஆனால், இந்தியாவில் சந்தைப்படுத்தும் பொருளாதாரமே மேலோங்கி உள்ளது.

கடந்த 1970-ம் ஆண்டில் 7 கோடிக்கும் மேலான நாட்டு மாடுகள் இருந்தன. தற்போது, அவை 7 ஆயிரமாக குறைந்துவிட்டன.

ஜல்லிக்கட்டை தடை செய் ததற்கு பின்னணியில் அரசியல் உள்ளது. அதனால்தான் அதை மீண்டும் நடத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். ஜல்லிக்கட்டை காட்டுமிராண்டித் தனமானது என கூறுபவர்களுக்கு, காளைகளின் மீது நாம் வைத்துள்ள பாசம் புரியாது. கோயிலில் கூட நந்தி சிலையை வணங்கிய பின்புதான் கடவுளை வணங்குகிறோம். நாம் குடும்ப உறுப்பினராகவும், தெய்வமாகவும் பாதுகாத்துவரும் மாடுகளை கொடுமைப்படுத்துவதாக பீட்டா அமைப்பினர் கூறிவருகின்றனர்.

இந்த விவகாரத்தை ஆட்சி யாளர்களும் கண்டுகொள்ள வில்லை. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காவிட்டால், இந்த ஆண்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT