தமிழகம்

‘மேன்டூஸ்' புயல் காரணமாக இன்று இரவு பேருந்து சேவை ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: ‘மேன்டூஸ்' புயல் இன்று கரையைக் கடப்பதை முன்னிட்டு, பாதிக்கப்படும் மாவட்டங்களில் இரவு பேருந்துகளை ரத்து செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், மாவட்ட ஆட்சியர்களுக்கும், போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றிக்கையில், ‘‘அனைத்து அலுவலர்களும் மாவட்ட தலைமையிடங்களில் பணியில் இருக்க வேண்டும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் கரையைக் கடக்கும் நிலையில், இரவுப் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட வேண்டும். பேருந்து நிறுத்தங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT