காவிரி டெல்டா பகுதியில் ஷேல் எரிவாயு எடுக்கும் விவகாரத்தில் மத்திய பெட்ரோலிய அமைச்ச கம், தமிழக அரசு பதில் அளிக்கு மாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
ஷேல் எரிவாயு தொடர்பாக காவிரி பாசனக் குத்தகை விவசாயி கள் சங்கத் தலைவர் முருகன், காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
‘காவிரி டெல்டா பகுதியில் பாறைப்படிம எரிவாயு (ஷேல் காஸ்), ஷேல் எண்ணெய் எடுப் பது தொடர்பான கட்டுமானம் கட்டு வது, வெடி வைத்து தகர்ப்பது, தோண்டுவது, ஆழ்துளையிடுவது போன்ற பணிகள், சர்வே பணி களை உரிய அனுமதி பெறாமல் தொடரக் கூடாது என்று ஓஎன்ஜிசி நிறுவனம், மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும். இப்பணி களை மேற்கொள்ள அவர்களுக்கு நிரந்தர தடை விதிக்க வேண் டும்’ என்று மனுக்களில் கூறப் பட்டிருந்தது.
இந்த வழக்கில் பதில் அளிக்கு மாறு பெட்ரோலிய அமைச்சகத் துக்கு பசுமை தீர்ப்பாயம் ஏற் கெனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தீர்ப்பாய உறுப் பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பி.எஸ்.ராவ் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வழக்கறிஞர் சிவராஜசேகரன் ஆஜராகி வாதிட்டனர். பெட்ரோலி யத் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘இந்த விஷயத் தில் மத்திய அரசு தனது கருத்தை தெரிவித்து கடிதம் அனுப்பியுள் ளது . மத்திய அரசின் கருத்துப்படி, காவிரி டெல்டா பகுதியில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை’’ என வாதிட்டார்.
இந்த வழக்கில் பின்னர் பதில் மனு தாக்கல் செய்வதாக தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதை யடுத்து, வழக்கு விசாரணை 2017 பிப்ரவரி 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. பெட்ரோலிய அமைச்சகம் மற்றும் தமிழக அரசு தரப்பில் அன்றைய தினம் பதில் மனுக்களை தாக்கல் செய்யுமாறு தீர்ப்பாய உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, ‘‘தமிழகத் தில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஷேல் எரிவாயு திட்டத்தை நிறைவேற்ற மாட் டோம் என்று கூறிய மத்திய பெட்ரோலிய அமைச்சர், அதே நாளில் இன்னொரு இடத்தில் இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.
இப்போது நடந்த விசாரணையிலும் மத்திய அரசு வழக்கறிஞர், ‘ஷேல் எரிவாயு திட்டத்தை நிறைவேற்றும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை’ என்று பொத்தாம் பொதுவாகதான் கூறினார். இதை நாங்கள் ஏற்கவில்லை. தமிழக அரசும் தனது கருத்தை தற்போது தெரிவிக்கவில்லை’’ என்றார்.