மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் சீற்றத்துடன் காணப்படும் கடல் 
தமிழகம்

தீவிர புயலாக மாறியது மாண்டஸ்: இந்திய வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், மணிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், சென்னையிலிருந்து 440 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. தற்போது மணிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து, பிறகு சற்றே வலு குறைந்து புயலாக இரவு கடக்கும். வெள்ளிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 20 மாவடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், வெள்ளி மற்றும் சனி ஆகிய இரண்டு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT