தமிழகம்

பாஜக நிர்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகள், மாவட்டதலைவர்களுடன் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் குறித்துடெல்லியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 2024 தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை திரும்பிய அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் இன்று (டிச.8) கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டம் மாலை வரை நடக்க இருக்கிறது. இதில், தேர்தல் வெற்றிக்கு வியூகம் வகுப்பதுபூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்டவை குறித்து இதில் அண்ணாமலை முக்கிய ஆலோசனை நடத்தி, அறிவுறுத்தல்கள் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்க மாநில நிர்வாகிகள், மாவட் தலைவர்கள் உள்ளிட்டோர் சென்னைக்கு வந்துள்ளனர்.

SCROLL FOR NEXT