ரூ.10 ஆயிரம் கோடியில் கிழக்கு கடற்கரைச் சாலையை 4 வழிப் பாதையாக மாற்றும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். தமிழக அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறது என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்க நேற்று புதுச்சேரி வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாலை விபத்துகளால் உயிரிழப்போர், காயமடைவோர் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் ஆண்டுக்கு சராசரி யாக 235 பேர் சாலை விபத்தால் உயிரிழக்கின்றனர். 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுச்சேரியில் 9.5 லட்சம் வாகனங்கள் உள்ளன. தேசிய சாலை வாகன எண்ணிக் கையின் சராசரி அளவைவிட அதிகப் படியான வாகனங்கள் இங்கு உள் ளன. வாகனங்களின் எண்ணிக் கையை கட்டுப்படுத்த வேண்டும்.
சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் வகை யில் கனம் குறைந்த, வலுவான ஹெல்மெட்டை உற்பத்தி செய்ய மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
ரூ.10 ஆயிரம் கோடியில் கிழக்கு கடற்கரைச் சாலையை 4 வழிப்பாதையாக மாற்றும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படும். தமிழக அரசு இதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறது. இதற்காக புதுச்சேரி மாநிலத்திலும் நிலம் கையகப்படுத்தும் பணி மேற் கொள்ள வேண்டியுள்ளது. மேலும், சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரைச் சாலை அமைக்கும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும்.
நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடக் கும் விபத்துகளில் 73 சதவீதம் விபத் துகள் ஓட்டுநரின் கவனக்குறைவால் நடக்கின்றன. 4.8 சதவீத விபத்து கள் பிற ஓட்டுநரின் தவறால் நடக் கின்றன. விபத்துகளுக்கு முக்கிய காரணம் அதிக வேகமே. அடுத்து மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டு வதால் அதிக விபத்துகள் நடக்கின் றன. அதற்கு தூண்டுகோலாக இருப் பது சாலைகளில் உள்ள மதுக்கடை கள் ஆகும். அவற்றை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் உள்ள மதுக்கடை களை மாநில அரசுகள்தான் அகற்ற வேண்டும்.
தமிழகத்தில் வரும் ஆண்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதற்கு தேவையான பணிகளை நான் தீவிரமாக செய்துள்ளேன்.
ஜெயலலிதாவுக்கு விருது
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விருது வழங்குவது தொடர்பாக தற்போது நான் எதுவும் கூற முடியாது. பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பாக குழுக்கள் உள்ளன. அந்த குழுக்கள்தான் ஆராய்ந்து உரிய முடிவெடுக்கும். என்னை பொறுத்தவரை அவர் துணிச்சல் மிக்க, திறமையான தேசிய பார்வை கொண்ட தலைவர்.
புதுச்சேரியில் புதிய 500 ரூபாய் மற்றும் சில்லறை தட்டுப்பாடு உள்ளது என்று கூறுவதால் இது பற்றி நிதி அமைச்சரிடம் தெரிவிப் பேன். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ஊழல் புகார் கூற ராகுல் காந்திக்கு எந்த தகுதியும் இல்லை.
புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி, அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்வது தவறு அல்ல. செயல்படக் கூடிய ஆளுநரை வாழ்த்த வேண்டியது நமது கடமை. தமி ழகத்தில் வார்தா புயல் பாதிப்பு களை ஆய்வு செய்ய மத்திய குழு வருகிறது. அதன் அறிக்கை அடிப்படையில் தேவையான நிதி வழங்கப்படும் என்றார்.
சென்னையில் மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்துக்கு திடீரென தமிழக அரசு ஒப்புதல் தந்துள்ளது குறித்து கேட்டதற்கு, "இத்திட்டத்தை நிறைவேற்ற கடந்த 2 ஆண்டுகளாக நான் தீவிர முயற்சி மேற்கொண்டேன். இதற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை 3 முறை சந்தித் துள்ளேன். தற்போதைய முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தபோதும், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை செயல் படுத்த வலியுறுத்தினேன். அதன் வெளிப்பாடுதான் தற்போது தமிழக அரசு ஒப்புதல் தந்துள்ளது'' என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.