சென்னை: கபாலீஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் காவேரி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் காவேரி, அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்த நிலையில், இன்று காலை மரணமடைந்துவிட்டார் என்ற செய்தியினை அறிந்து பெரிதும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சக அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.