சசிகலாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டனில் நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.
வரும் 29-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடை பெறவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற் றுள்ளது. முதல்வராக வும், அதிமுக பொதுச்செய லாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். அன்றிரவே ஓ.பன்னீர்செல்வம் தலைமை யிலான அமைச்சரவை பதவியேற்றது.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். முதல்வரான பிறகு இரண்டு, மூன்று முறை போயஸ் கார்டனுக் குச் சென்று சசிகலாவை ஓ.பன்னீர் செல்வம் சந்தித்துப் பேசினார்.
‘வார்தா’ புயல் நிவாரணம் பெறுவதற்காக கடந்த 19-ம் தேதி டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித் துப் பேசினார். கடந்த 21-ம் தேதி தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர் பத வியிலிருந்து விடுவிக்கப் பட்டு புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப் பட்டார். ஆனால், இது குறித்து முதல்வர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பெரும் பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளதா என்பதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் என திமுக பொரு ளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டா லின் கூறியிருந்தார்.
டெல்லி சென்று திரும்பிய பிறகு சசிகலாவை சந்திக்காத ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சந்தித்துப் பேசினார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்வு, தலைமைச் செயலகத்தில் நடந்த சோதனை, ஸ்டாலி னின் கருத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாகக் கூறப் படுகிறது.