தமிழகம்

வண்ணாரப்பேட்டை விம்கோநகர் இடையே மெட்ரோ ரயில் சேவைக்காக சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடக்கம்

செய்திப்பிரிவு

வண்ணாரப்பேட்டை விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணிக்கு சுரங்கம் தோண்டும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. இதற் காக ராட்சத இயந்திரங்களைப் பூமியில் இறக்கி, பொருத்தும் பணி கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் 2 வழித் தடங் களில் மெட்ரோ ரயில் திட்டப் பணி கள் நடந்து வருகின்றன. தற்போது, பரங்கிமலை கோயம்பேடு, விமானநிலையம் ஆலந்தூர் சின்னமலை இடையே சுமார் 19 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வண்ணாரப் பேட்டையில் இருந்து திருவொற்றி யூர் விம்கோநகர் வரை மெட்ரோ ரயில் பாதையை விரிவுபடுத்த மாநில அரசு அனுமதியுடன் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றது. மத்திய மாநில அரசுகள் மற்றும் ஜப்பான் நாட்டின் நிதி நிறுவனத்தின் கடன் வசதியுடன் இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையான 9 கி.மீ. தொலைவு விரிவாக்கத்தில் மொத்தம் 8 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பே கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், வண்ணாரப்பேட்டையில் இருந்து 2 கி.மீ. சுரங்கப்பாதையில் இயக்கப்படுகிறது.

அப்கான்ஸ் நிறுவனம் இதற் கான பணிகளை மேற்கொள்கிறது. தற்போது, சுரங்கம் தோண்டு வதற்கான ராட்சத இயந்திரங்கள் இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஒரிரு மாதங் களில் சுரங்கம்தோண்டும் பணி கள் தொடங்கப்படும். வண்ணாரப் பேட்டை விம்கோநகர் வரையி லான ஒட்டுமொத்த பணிகளும் 2018-ம் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

SCROLL FOR NEXT