சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் 1,350 ரயில்வே போலீஸார் மற்றும் 3,000 ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் இணைந்து, பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
50-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது. சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் 350 ரயில்வே போலீஸார் மற்றும் 350 ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.