சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ராஜபாளையம் நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்தை திருநெல்வேலி மாவட்டம், டி.ராம நாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்த குமார்(29) என்பவர் ஓட்டி வந்துள் ளார். மற்றொரு ஓட்டுநரான திரு வில்லிபுத்தூர் ஏ.ராமலிங்கா புரத்தைச் சேர்ந்த தட்சணா மூர்த்தி(54), பெண்கள் உட்பட 14 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.
நேற்று அதிகாலை 6 மணி யளவில் திருவில்லிபுத்தூர் சாலையில் அழகாபுரிவிலக்கு அருகே பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்னால் உள்ள அபாய விளக்கில் மின் கசிவு ஏற்பட்டு புகை பரவியுள்ளது. பேருந்தில் வந்த ராஜபாளையத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரது மகன் ராம்சுந்தர்(21) என்பவர் இதைப் பார்த்து திடுக்கிட்டு பயணிகள் அனைவரையும் எழுப்பி உஷார் படுத்தி உள்ளார்.
உடனடியாக பேருந்து நிறுத்தப் பட்டது. பயணிகள் அனைவரும் அவசரமாக கீழே இறக்கப்பட்டனர். சற்று நேரத்தில் பேருந்தில் தீப்பற்றியது. பேருந்தில் இருந்த நீரைக் கொண்டு ஓட்டுநர்கள் தீயை அணைக்க முயன்றும் முடிய வில்லை.
தீ வேகமாக பரவியதால் பேருந்தில் வந்த பயணிகள் தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ்ஸின் பெரும்பகுதி சேதமடைந்தது.
தீப்பற்றி எரிந்ததில் முற்றிலும் சேதமடைந்த ஆம்னி பேருந்து.