மயிலாப்பூர் பட்டதாரி பெண் கொலையில் அவரது நண்ப ருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவரை போலீஸார் கைது செய்தனர். அவரது கூட்டாளியைத் தேடி போலீஸார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.
சென்னை மயிலாப்பூர் பி.வி.சோலை தெருவை சேர்ந்தவர் நிவேதா (22). எம்சிஏ பட்டதாரி. இவர் கடந்த 14-ம் தேதி தோழியைப் பார்க்கச் செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே உள்ள தனியார் விடுதியில் நிவேதாவின் உடல் நேற்று முன்தினம் கண்டுபிடிக் கப்பட்டது. அவரது கழுத்து உட்பட பல இடங்களில் நகக் கீறல்கள், காயங்கள் இருந்தன. அவர் பலாத்காரம் செய்து கொல்லப் பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்தனர்.
இதைத் தொடர்ந்து, மயிலாப்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து, நிவேதாவின் செல்போன், ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்தனர். இதில் தெரியவந்த தகவல்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
ஃபேஸ்புக் நட்பு
மதுரை ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (25). இவர் ஃபேஸ்புக் மூலம் நிவேதாவுக்கு அறிமுகமாகியுள்ளார். ஃபேஸ் புக்கிலேயே இருவரும் நட்பை வளர்த்துள்ளனர். கடந்த ஓராண் டாகவே அவர்கள் நட்புடன் பழகி வந்துள்ளனர். இதற்கிடையில், சென்னைக்கு வந்து ஏ.சி. மெக் கானிக்காக வேலை செய்துவந்த சுரேஷ்குமார், நிவேதாவுடனான நட்பை தொடர்ந்து வந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து மெரினா கடற்கரை உட்பட பல்வேறு இடங்க ளுக்குச் சென்று வந்துள்ளனர்.
சம்பவத்தன்று இருவரும் மயிலாப்பூர் லஸ் கார்னர் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். அப்போது, சுரேஷ்குமாரின் நண்பர் சுபாஷ் என்பவரும் அங்கு வந்துள்ளார். அவருடனும் நெருக்கமாக இருக்கு மாறு நிவேதாவை இளைஞர்கள் இருவரும் வற்புறுத்தியதாக தெரிகிறது. இந்த மோதலில் நிவே தாவை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சுரேஷ்குமாரை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். அவரது நண்பர் சுபாஷை கைது செய்ய போலீஸார் மதுரைக்கு விரைந்துள்ளனர்.