தமிழகம்

கனியாமூர் தனியார் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடக்கம்

ந.முருகவேல்

கள்ளக்குறிச்சி: மாணவி தற்கொலையால் பல்வேறு சர்ச்சைகளுக்கும் உள்ளான கனியாமூர் தனியார் பள்ளி நீதிமன்ற உத்தரவின்படி இன்று (டிச.5) காலை திறக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சில மாதங்களுக்கு முன் மாணவி ஒருவர் இறப்பு தொடர்பாக போராட்டக்காரர்கள் பள்ளி மற்றும் அதன் வளாகத்தை தீக்கரையாக்கினார். இதனால் பள்ளி காலவரையின்றி மூடப்பட்டது.

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவும் மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு வாடகை கட்டிடங்கள், வேறு பள்ளிகள் மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்றது.

விருப்பமுள்ள மாணவர்கள் மாற்றுச் சான்றிதழை பெற்றுக்கொண்டு மற்ற பள்ளியிலும் தங்களை இணைத்துக் கொண்டு படிக்கத் தொடங்கினர். இந்நிலையில் பள்ளி முழுவதும் சீரமைக்கப்பட்டு கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நேரடி கள ஆய்வு செய்து அறிக்கை அனுப்பினர்.

நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனைகளுடன் பள்ளி திறக்க அனுமதி வழங்கப்பட்டு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் செய்துள்ளது. போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT