கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி (டிச.6) கோவையில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகரில் 3 ஆயிரம் காவலர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் புறநகர் பகுதியில் ஆயிரம் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.