ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு பல்வேறு வழித் தடங்களில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘1-ம் தேதி அதிகாலையில் பார்த்தசாரதி கோயில், கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், சாந்தோம் சர்ச், பெசன்ட்நகர் சர்ச் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கும், மாலையில் வண்டலூர், கோவளம், மெரீனா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கும் அதிகளவில் மக்கள் செல்வார்கள். எனவே, மக்களின் வசதிக்காக போதிய அளவில் சிறப்பு பேருந்துகளை இயக்க கிளை மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். குறிப்பாக பிராட்வே, தாம்பரம், குன்றத்தூர், பெசன்ட்நகர், அடையார் உள்ளிட்ட முக்கியமான வழித்தடங்களில் கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.