திருநெல்வேலி / தென்காசி: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 48 மி.மீ. மழை பதிவானது.
ஊத்து பகுதியில் 45 மி.மீ., காக் காச்சி பகுதியில் 38, மாஞ்சோலை, மூலக்கரைப் பட்டியில் தலா 35, கொடுமுடியாறு அணையில் 22, பாளையங்கோட்டையில் 19, களக்காட்டில் 10.40, அம்பாசமுத்திரம், நாங்குநேரியில் தலா 10 திருநெல்வேலியில் 8, பாபநாசம், சேர்வலாறில் தலா 6, ராதாபுரத்தில் 4.40, மணிமுத்தாறில் 2.40, சேரன்மகாதேவியில் 1.60 மி.மீ. மழை பதிவானது.
இதெபோல் தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை, கருப்பாநதி அணையில் தலா 10 மி.மீ., குண்டாறு அணையில் 4.20, செங்கோட்டையில் 3.40, அடவி நயினார் அணையில் 3, ராமநதி அணையில் 2.20, ஆய்க்குடி, சங்கரன்கோவில், சிவகிரியில் தலா 1 மி.மீ. மழை பதிவானது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் பிரதான அருவியில் நேற்று இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.