தமிழகம்

அதிமுகவில் இருந்து நடிகர் ஆனந்தராஜ் விலகல்

செய்திப்பிரிவு

அதிமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமைக்கழக பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர் களிடம் அவர் நேற்று கூறியதாவது:

முதல்வராக இருந்த ஜெய லலிதா மறைந்த பிறகு அவருக்கு இணையாக சசிகலாவை முன்னாள் அமைச்சர்கள் செங் கோட்டையன், பொன்னையன் உள்ளிட்டோர் பேசி வருகின்றனர். அதை ஏற்க முடியாது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிகர் அவர் மட்டுமே. ஜெயலலிதாவுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவ ருடன் மற்றவர்களை ஒப்பிட்டுப் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

அதிமுக தொண்டர்கள் விரும் பும் ஒருவர்தான் பொதுச் செயலாளராக வரவேண்டும். நாளை (இன்று) நடைபெறும் பொதுக்குழுவுக்கு எனக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட வில்லை.

எனவே, அதிமுகவில் இருந்து விலக முடிவு செய்துள் ளேன். சந்தர்ப்பம் கிடைத்தால் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT