கோப்புப் படம் 
தமிழகம்

மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்சிடி கருவி பொருத்துவது கட்டாயம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: மின் இணைப்பு உள்ளவர்கள் ஆர்சிடி கருவியை பொருத்துவது கட்டாயம் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மழைக் காலங்களில் மின் கசிவு காரணமாக அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்துகளால் மனித உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதை தடுக்க அனைத்து வீடுகளிலும் ஆர்டிசி (Residual Current Device) கருவியை பொருத்த வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார ஒங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மின் கசிவால் ஏற்படும் இறப்புகளை தடுக்க மின் இணைப்புகளுடன் இந்த கருவியை பொருத்துவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடு, கடை, தொழில், பண்ணை வீடு, கல்வி நிறுவனங்கள் என அனைத்து வகை மின் நுகர்வோரும் இந்த கருவியை பொருத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT