தமிழகம்

கல்லூரி மாணவியை கடத்திய வழக்கில் 5 பேருக்கு ஆயுள்

செய்திப்பிரிவு

கல்லூரி மாணவியை கடத்தி ரூ. 2 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் எல்ஐசி முகவர் உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன் றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

சென்னை அடையாறு அருகே கடந்த 2013-ம் ஆண்டு சாஸ்திரி நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவரின் மகளான பொறியியல் கல்லூரி மாணவி கல்லூரியில் இருந்து வீடு திரும்பும் போது சிலர் அவரை கடத்திச் சென்றனர்.

பி்ன்னர் அந்த மாணவி யின் தந்தையான தொழிலதி பரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். இதுதொடர் பாக சாஸ்திரி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து எல்ஐசி முகவரான பழனிச்சாமி மற்றும் அவரது நண்பர்களான லோகநாதன், ராஜாமணி, முருகன் மற்றும் அஜய் ஆகியோரை கைது செய்தனர். கல்லூரி மாணவியையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த வழக்கை சென்னை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கோகிலா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களுக்கு ஆயுள் தண் டனை விதித்து நேற்று தீர்ப் பளித்தார்.

SCROLL FOR NEXT