தமிழகம்

ஆளுநருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கிண்டி ராஜ்பவனில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நீடித்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், ‘‘திருவையாறு தியாக பிரம்ம மகோத்சவ விழாவில் ஆளுநர் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தேன். தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்தும் ஆளுநருடன் விவாதித்தேன். ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் உட்பட எல்லா விஷயங்கள் குறித்தும் பேசினோம். ஆன்லைன் ரம்மியை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டால் அது நல்லதுதான். ஆளுநரின் செயல்பாட்டை அரசியலாக்குவது ஏற்புடையதல்ல’’ என்றார்.

SCROLL FOR NEXT