தமிழகம்

தாம்பரம் - தி.மலை இடையே 2 நாட்களுக்கு சிறப்பு ரயில் இயக்கம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: தாம்பரத்தில் இருந்து திருவண்ணா மலைக்கு வரும் டிச.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பரணி தீபம் மற்றும் மகா தீபம் வரும் 6-ம் தேதி ஏற்றப்படவுள்ளன. இதையொட்டி, சென்னையில் இருந்து வேலூர் வழியாகவும், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக வரும் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலைக்கு வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தாம்பரத்தில் இருந்து காலை 8.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. செங்கல்பட்டு காலை 9.08 மணி, மதுராந்தகம் காலை 9.33 மணி, மேல்மருவத்தூர் காலை 9.44 மணி, திண்டிவனம் காலை 10.03 மணி, விழுப்புரம் காலை 10.55 மணி, திருக்கோவிலூர் முற்பகல் 11.40 மணி மற்றும் திருவண்ணா மலையை பகல் 12.15 மணிக்கு வந்தடைகிறது.

பின்னர், திருவண்ணாமலையில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படுகிறது. திருக்கோவிலூர் பிற்பகல் 2.13 மணி, விழுப்புரம் பிற்பகல் 2.50 மணி, திண்டிவனம் பிற்பகல் 3.49 மணி, மேல்மருவத்தூர் மாலை 4.09 மணி, மதுராந்தகம் மாலை 4.22 மணி, செங்கல்பட்டு மாலை 4.48 மணி மற்றும் தாம்பரத்தை மாலை 5.30 மணிக்கு சென்றடைகிறது.

SCROLL FOR NEXT