*
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன் னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் வலியுறுத்தியுள்ளார்.
''மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு 75 நாட்களாக தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக நேற்றுமுன் தினம் (டிச. 15) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திருநாவுக்கரசர், ''ஜெயலலிதாவுக்கு சென்னை தனி யார் மருத்துவமனையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர்கள் மூலம் உலகத் தரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே, அது குறித்து மருத்துவ மனை சார்பில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டது. எனவே, அவ ருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கையோ, கறுப்பு அறிக்கையோ தேவை யில்லை. வெள்ளை அறிக்கை வெளி யிடுவதால் ஜெயலலிதா உயிரோடு வரப்போவதில்லை'' என்றார்.
திருநாவுக்கரசரின் இந்தக் கருத்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக வினரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருநாவுக்கரசரின் கருத்து அவரது சொந்தக் கருத்து என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’விடம் நேற்று அவர் கூறியதாவது:
மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்
ஜெயலலிதா ஒரு சாதாரணமான மனிதர் அல்ல. தமிழக முதல் வராகவும், தமிழகத்தில் வலிமை வாய்ந்த அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் இருந்தவர். எனவே, அவருக்கு 75 நாட் களாக என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவும் என்னென்ன சிகிச்சை முறைகளை கையாண் டனர்? என்பது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும்.
முதல்வர்களாக இருந்த அண்ணாவும், எம்.ஜி.ஆரும் மருத்துவமனையில் இருந்தபோது அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர்கள் அவ்வப்போது தகவல் அளித்து வந்தனர். ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் தமிழக அரசு சார்பில் சுகாதாரத் துறை அமைச்சரோ, மற்றவர்களோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. எனவே, தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கும் எழுந்துள்ள சந்தேகங்களைப் போக் கும் வகையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
வெள்ளை அறிக்கை வெளியிடு வதால் ஜெயலலிதா உயிரோடு வரப்போவதில்லை என திருநாவுக் கரசர் கூறியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு கூட இன்னமும் நடந்து வருகிறது. என்ன நடந்தாலும் ராஜீவ் காந்தி உயிரோடு வரப்போவதில்லை. அதனால் ராஜீவ் காந்தியை கொன்றவர்களை தண்டிக்க வேண்டாம் எனக் கூற முடியுமா? வெள்ளை அறிக்கை வேண்டாம் என தனது சொந்தக் கருத்தையே திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
''வெள்ளை அறிக்கை கேட் பதால் ஜெயலலிதா உயிரோடு வரப்போவதில்லை'' என தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக் கரசர் கூறியுள்ள நிலையில், இளங்கோவன் இவ்வாறு கூறி யிருப்பது காங்கிரஸில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.