பொதுமக்கள் அழைக்கும் இடங்களில் குடிநீர் விநியோகம் செய்ய சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்காக ஹெல்ப்லைன்கள் தரப்பட்டுள்ளன.
வார்தா புயல் தாக்கியதில் சென்னையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும், தெரு மின்விளக்கு கம்பங்களும் சாய்ந்துள்ளன. இதை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், பல இடங்களின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதை தீர்க்க பொதுமக்கள் அழைக்கும் இடங்களில் குடிநீர் விநியோகம் செய்ய சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை மாநகரில் வார்தா புயல் சேதங்களைக் கருத்தில்கொண்டு, பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, தொலைபேசி மூலமாக குடிநீர் வழங்கக் கோரி அழைத்தால், குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடிநீர் வாரியம் செய்துள்ளது.
அதற்காக குடிநீர் லாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் நிரப்பும் நிலையத்தின் வேலை நேரமும், லாரியின் மூலம் விநியோகிக்கும் நடைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் கீழ்கண்ட எண்களுக்கு தொடர்புகொண்டு, தேவைக்கு ஏற்ப, 9 ஆயிரம் மற்றும் 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட லாரிகளை வரவழைத்து குடிநீரை பெற்றுக்கொள்ளலாம்.
மண்டல வாரியாக தொடர்புகொள்ளும் எண்கள்:
* திருவொற்றியூர் மண்டலம்: 044-25991908
* மணலி மண்டலம்: 044-25553090
* மாதவரம் மண்டலம்: 044-25530100
* தண்டையார்பேட்டை மண்டலம்: 044-25920609,
* இராயபுரம் மண்டலம்: 044-25902651
* திரு.வி.க. நகர்: 044-26505435
* அம்பத்தூர் மண்டலம்: 044-26530929
* அண்ணா நகர் மண்டலம்: 044-26441679
* தேனாம்பேட்டை மண்டலம்: 044-28341448
* கோடம்பாக்கம் மண்டலம்: 044-28153803
* வளசரவாக்கம் மண்டலம்: 044-24866419
* ஆலந்தூர் மண்டலம்: 044-22241315
* அடையார் மண்டலம்: 044-22351145
* பெருங்குடி மண்டலம்: 044-22584288
* சோழிங்கநல்லூர் மண்டலம்: 044-24501695