கோயம்பேடு மார்க்கெட்டில் பொங்கல் சிறப்பு சந்தை ஜனவரி 9-ம் தேதி திறக்கப்பட உள்ளது.
பொங்கலை ஒட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் பொங்கல் சிறப்பு சந்தை 10 நாட்கள் வரை நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, மண் பானை, வாழை இலை உள்ளிட்ட பல்வேறு படையல் பொருட்கள் விற்கப்படும். இந்த சந்தை வரும் ஜனவரி 9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டில் பூ மார்க்கெட் வளாகத்தின் பின் புறம் உள்ள காலி இடத்தில் நடை பெற உள்ளது.
ரூ.8 லட்சம் ஏலம்
பொங்கல் சிறப்பு சந்தை தொடர்பாக கோயம்பேடு மார்க் கெட் நிர்வாகக் குழு அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொங்கல் சிறப்பு சந்தையில் கடை வைப்பதற்கும் சரக்குகளை ஏற்றிக் கொண்டு மார்க்கெட்டினுள் நுழையும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிப்ப தற்கான ஏலம், கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு முதன்மை நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.8 லட்சத்து 21 ஆயிரத்து 953 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ரூ.8 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
பொதுமக்கள் சிரமம் இன்றி பொருட்களை வாங்கிச் செல்ல உரிய நடவடிக்கை எடுக் கப்படும். போலீஸ் பாதுகாப்பும் போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.