தமிழகம்

பழனிசாமியுடன் இணைய வாய்ப்பில்லை: டிடிவி தினகரன் திட்டவட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: பழனிசாமியோடு இணைய வாய்ப்பில்லை என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை சார்பில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகூட்டம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில்சென்னையில் நேற்று நடந்தது.பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் லட்சியஆட்சியை அமைக்கதான் இக்கட்சி தொடங்கப்பட்டது. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

பழனிசாமியோடு இணைய வாய்ப்பே இல்லை. அதிமுக ஒரு பலவீனமாகிவிட்ட கட்சி. அதனிடம் சின்னம் இல்லை. கட்சி அலுவலகத்தையும், கட்சியையும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அடுத்து ஒரு இடைத்தேர்தல் வந்தால், அவர்களால் கட்சியினருக்கு சின்னத்தை ஒதுக்க முடியாது.

ஒருவேளை நீதிமன்றத்தில்பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்புவந்தாலும்கூட, ஒரு பலவீனமாகிவிட்ட கட்சிக்கு சின்னம் கிடைத்துஒரு பயனும் இல்லை. 2024 தேர்தல் கூட்டணி தொடர்பாக அடுத்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் முழு வடிவம் கிடைக்கும்.

SCROLL FOR NEXT