சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று முன்தினம் சந்தித்த அண்ணாமலை, செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அவரது பாதுகாப்பில் குறைபாடு நிலவியதாகப் புகார் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார் அண்ணாமலை. அங்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்போது, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின்போது பாதுகாப்புக் குறைபாடு, தமிழக சட்டம்-ஒழுங்கு நிலைமை, தமிழக உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மீது தெரிவிக்கப்படும் போலி பாஸ்ட்போர்ட் புகார், அதிமுக நிகழ்வுகள், பாஜக உட்கட்சி மோதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர்களுடன் அண்ணாமலை பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.