வருமானவரித்துறை சோதனை காரணமாக, தலைமைச் செயலராக இருந்த ராம மோகன ராவ் மாற் றப்பட்டு, புதிய தலைமைச் செயலராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் சென்னையில் நேற்று நிருபர்களை சந்தித்த ராம மோகன ராவ், தான் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றும் இதற்கான தகவல் ஏதும் தனக்கு அளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக, ஒரு அதிகாரி மீதான நடவடிக்கை அவருக்கு தெரியப்படுத்தப்படும். ஆனால், கிரிஜா வைத்தியநாதன் நியமனத் தில், ராம மோகன ராவுக்கு பதி லாக நியமிக்கப்படுகிறார் என்ற தகவல் மட்டுமே உள்ளது. இதுதான் தற்போது ராம மோகன ராவ் குற்றம்சாட்டுவதற்கான கார ணமாக அமைந்துள்ளது.
ஒரு ஐஏஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டாலோ, காத்திருப்போர் பட்டியலில் வைக் கப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட வருக்கு தகவல் தெரிவிக்கப்படும் முறை தொடர்பாக, தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் கூறும் போது, “ஒருவருக்கு பதில் மற்றொருவருக்கு அதே பதவி அளிக்கப்பட்டுவிட்டாலே, ஏற்கெனவே இருந்தவர் நீக்கப் பட்டதாகவே கருதப்படும். இந்த நடைமுறை அனைவருக்கும் தெரியும்.
அந்த அதிகாரி அலுவல கத்தில் இருந்தால் துறைக்கு தகவல் அனுப்பப்படும். ஒரு வேளை நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில் அந்த அதிகாரி வீட்டில் இருந்தால், அதற்கான தகவல் அளிக்க வேண்டி வரும். அப்போது உத்தரவானது சம்பந்தப்பட்ட அதிகாரியின் வீட்டுக்கு அலுவலர் மூலம் கொடுத்தனுப்பப்படும். அந்த அதிகாரி வீட்டில் இல்லை எனில், வீட்டுக் கதவில் உத்தரவு ஒட்டப்படும். அது புகைப்படம் எடுக்கப்படுவதுடன், அதில் அப்பகுதி கிராம நிர்வாக அலு வலர் அல்லது காவல்துறை அதி காரியின் முன்னிலையில் நடப்ப தற்கான ஆவணமும் இணைக்கப் பட்டிருக்கும்’’ என்றார்.
ராம மோகன ராவ் விவ காரத்தைப் பொறுத்தவரை, கிரிஜா வைத்தியநாதன் நியமன உத்தரவின் கீ்ழ், ‘காப்பி டூ’ பகுதியில், ராம மோகன ராவுக்கும் ஒரு நகல் அனுப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.