செய்யூர் அடுத்த விழுதுமங்கலம் கிராமத்தில் மூளைச்சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது தந்தை தானமாக அளித் தார். மூளைச்சாவடைந்த இளைஞ ரின் உடல் உறுப்புகள் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திங்கள்கிழமை தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த விழுதுமங்கலம் கிராமத் தைச் சேர்ந்தவர் சகாயம். இவ ருடைய மகன் ஸ்டாலின் (28) எலக்ட் ரியஷனாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், சிலதினங்க ளுக்கு முன் பணியின்போது ஸ்டாலி னின் தலையில் சுத்தி விழுந்துள்ளது.
ஆனால், பெரியஅளவில் காயம் ஏற்படவில்லை என கருதி ஸ்டாலின் சிகிச்சை பெறாமல் இருந்துள் ளார். இந்நிலையில், கடந்த வெள் ளிக்கிழமை அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு ஞாயிற் றுக்கிழமை இரவு மூளைச் சாவு ஏற்பட்டது. அதனால், அவரு டைய தந்தை சகாயம், தனது மகன் ஸ்டாலினின் உடல் உறுப்பு களை தானமாக அளிப்பதாக மருத்துவமனை மருத்துவர் களிடம் எழுத்துப்பூர்வமாக தெரி வித்தார். அதன்பேரில் ஸ்டாலி னின் உடலில் இருந்து மருத்து வர்கள் உறுப்புகளை தானமாக பெற்றுக் கொண்டனர்