முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம் 
தமிழகம்

நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி முருகேஷ், த/பெ,ரவி, உதயகுமார், த/பெ.ராஜு மற்றும் விஜய், த/பெ.முனியன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இச்சம்பவத்தில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT