தமிழகம்

புயலால் பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர கோரிக்கை

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, திரு வாலங்காடு, பள்ளிப்பட்டு, பொன் னேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், நீர் நிலைகளை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிசை வீடுகள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வார்தா புயல் பழவேற்காடு அருகே கரையை கடந்தபோது, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இருளர் இன மக்களின் குடிசை வீடுகள் கடுமையாக சேத மடைந்தன. இதுகுறித்து, இருளர் இன மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் பிரபு தெரிவித்ததாவது:

வார்தா புயலால் பழவேற்காடு, பொன்னேரி, பெரியபாளையம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், இருளர் இன மக்களின் குடிசைகளின் மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. சுவர்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக, பழவேற்காடு, பொன் னேரி, மீஞ்சூர் பகுதிகளில் நூற்றுக் கணக்கான குடிசை வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இருளஞ்சேரி, திருப்பாச்சூர், பேரம்பாக்கம், பாக்கம், தொழுதவாக்கம், நரசிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களுக்கு நிவாரணம் கிடைக்காததால் அவர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். எனவே, புயலால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்குவதோடு, கான்கிரீட்டால் ஆன வீடுகளை அரசு கட்டித் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT