தமிழகம்

செயல்படாத மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை நீக்க நடவடிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸில் செயல்படாத மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் நீக்கப்படுவார்கள் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் சு.திருநாவுக்கரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப் பட்டோர் மாநில நிர்வாகிகள், மாவட் டத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநிலத் தலைவராக நான் பொறுப்பேற்றதும் இளைஞரணி, மகரளிரணி என கட்சியின் அனைத் துப் பிரிவு நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன். அதன் தொடர்ச்சியாக இன்று பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிர்வாகி களுடன் ஆலோசனை நடை பெற்றது.

இதுதவிர மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி யின் வளர்ச்சிக்கான செயல்திட் டங்கள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இதுபோன்ற கூட்டங் களின் மூலம் செயல்படாத மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப் பட்டு மேலிடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலிடத் தலைவர்களின் அனுமதியுடன் செயல்படாத மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். எனவே, பொறுப்பில் இருப்பவர்கள் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும்.

கறுப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கையால் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 22 நாட்களாகியும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஏ.டி.எம்களில் கிடைக்கவில்லை. சம்பள தேதி நெருங்குவதால் அனைத்து வங்கிகள், ஏ.டி.எம்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாத ஊதியம் பெறுவோருக்கு ரொக்கமாகவே ஊதியம் வழங்க வேண்டும். பணத் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்கள் குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி, மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, எஸ்.சி. பிரிவுத் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT