அப்சரா ரெட்டி - ’ப்ரவோக்’ ஆங்கில மாத இதழின் ஆசிரியர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வி.கே.சசிகலாவை பேட்டிக்காக பேசவைத்திருக்கும் சென்னை திருநங்கை.
ஆஸ்திரேலிய பெண் பிரதமர் ஜூலியா கிலார்ட், மைக்கேல் ஷூமேக்கர், அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களிடம் நேர்காணல் நடத்தி இருக்கும் அப்சரா ரெட்டி ஜெயலலிதாவின் விசுவாசியாக அதிமுக-வுக்கு ஈர்க் கப்பட்டவர். இப்போது சசிகலாவின் அபிமானியாக பேசுகிறார். தனது ‘ப்ரவோக்’ மாத இதழுக்காக சசிகலாவிடம் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் உரையாடி இருக்கிறார் ரெட்டி.
அந்த அனுபவத்தை இங்கே நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். ’’நான்கு மாதங்களுக்கு முன்பே சசிலகா நேர்காணலுக்கு அனுமதி கேட்டிருந்தேன். இந்த நேரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை சொல் லியாக வேண்டும். நான் ஜெயலலிதா கையால் அதிமுக உறுப்பினர் அட்டை பெறவேண்டும் என்று சொன்னபோது ’திருநங்கைக்கு இவ்வளவு முக்கி யத்துவம் தேவையா?’ என அதிமுக-வில் உள்ள சிலர் முட்டுக்கட்டை போட்டார்கள்.
ஆனால், சசிகலா தான் எனது கடிதத்தை பரிசீலித்து எனது விருப்பத்தை நிறைவேற்றினார். கடந்த மே மாதம் ஜெயலலிதா கையால் நான் உறுப்பினர் அட்டை பெற்றபோது என்னை உற்சாகப்படுத்தி மேடைக்கு அனுப்பியவரும் அவர் தான்.
நான் கேட்டதுமே நேர்காணலுக்கு சம்மதித்துவிட வில்லை சசிகலா. இருந்தாலும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தேன். ஜெயலலிதாம்மா இறந்து பத்து நாட்கள் கடந்திருந்த நிலையில், எனக்கு சசிகலாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. எப்படியும் பேட்டி எடுத்துவிட வேண்டும் என்ற முடிவோடு போனேன். அவரிடம் நான் கேட்டது ஐந்து நிமிடங்கள் தான். ஆனால் என்னோடு 45 நிமிடங்கள் மனம்விட்டு பேசினார். முப்பது வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதாவிடம் பழக ஆரம்பித்த நினைவுகளில் தொடங்கி அப்போலோவில் கரைந்த நிமிடங்கள் வரை அனைத்தையும் பேசினார்.
அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையில் இருந்த இணைபிரியா நட்பின் சுவடுகளைப் பற்றி மட்டுமே பேசவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால், அதையும் தாண்டி அரசியல் சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டிய கட்டாயம். இதுபோன்ற இக்கட்டான சூழலில் இருப்பவர்கள், தங்களுக்கு உடன்பாடில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நாசூக்காக தவிர்த்துவிடுவார்கள். ஆனால், சசிகலா எந்தக் கேள் வியையும்
அப்படி ஒதுக்கவில்லை. அத்தனை கேள்விகளுக்கும் நிதானமாக நேர்மையான பதிலைத் தந்தார்.
சசிகலா பேட்டியளித் திருக்கிறார் என்று கேள்விப்பட்ட சிலர் என்னைத் தொடர்பு கொண்டு, ‘சின்னம்மா கட்சியின் பொதுச் செயலாளர் ஆவாரா, முதல்வர் பொறுப்பை ஏற்பாரா? என்றெல்லாம் கேட்டார்கள். இதே கேள்வியை அவரிடம் நான் வேறு மாதிரியாக கேட்டேன். பதவிக்கு வரவேண்டும் என்பதற்காக இத்தனை ஆண்டுகள் தான் இங்கே இருக்கவில்லை என்பதை அவரது பதிலில் புரிந்துகொள்ள முடிந்தது. ’அப்படி நினைத்திருந்தால் அக்கா உயிரோடு இருக்கும்போதே எனக்கான பதவியை கேட்டுப் பெற்றிருக்க முடியும். இப்ப வரைக்கும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.’ன்னு அவங்க சொன்னாங்க. அவங்களுக்கு பக்கத்தில் நின்று என்னோட அலை பேசியில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என நான் சொன்னபோது பாதுகாலவர்கள் தடுத்தார்கள். ஆனா, அவர்களை தடுத்து என்னோட போட்டோ எடுத்துக்க ஒத்துக்கிட்டாங்க.
சாதாரணமா பிரபலங்களைப் பற்றி தவறான செய்திகள் வரும்போது உணர்ச்சிவசப்பட்டு ரியாக்ட் பண்ணுவார்கள். சசிகலாவைப் பற்றி என்னென்னமோ வதந்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பு கிறார்கள். எதுக்குமே அவர் உணர்ச்சிவசப் படவில்லை. அந்தளவுக்கு அவங்க பக்குவப்பட்டு ருக்காங்க. அதேசமயம் கேள்விகளுக்கு அவரிட மிருந்துடைனமிக் வாய்ஸில் பதில்கள் வந்து விழுகின்றன. சசிகலாவைப் பற்றி என மனத்தில் இருந்த அத்தனை கேள்வி களுக்கும் விடை கிடைத்த திருப்தியோடு வேதா நிலையத்திலிருந்து நான் வெளியேறினேன்’’