தமிழகம்

காளையார்கோவில் அருகே 13 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் இல்லை: ஊருணி நீரை குடிக்கும் மக்கள்

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே 13 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் விநியோகம் இல்லாததால் மக்கள் ஊருணி நீரை குடித்து வருகின்றனர்.

காளையார்கோவில் அருகே பெரிய கண்ணனூர், கண்ணமுத் தான்கரை, பகைங்சான், ஆத்தி வயல், கள்ளிக்குடி, கலசாங்குடி, சுண்டங்குறிஞ்சி, பனங்குடி உள்ளிட்ட 13 கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதற்காக காவிரி குடிநீர் மறவமங்கலத்தில் இருந்து பெரி யகண்ணனூர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு 13 கிராமங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இளையான் குடி-காளையார்கோவில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது, மறவமங்கலம் அருகே காவிரி குழாயை சிலர் சேதப்படுத்தினர். அதை சரிசெய்யாததால் 13 கிராமங்க ளுக்கும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

பெரிய கண்ணனூரைச் சேர்ந்த தங்கவேலு கூறுகையில், காவிரி குடிநீர் வராததால் ஊருணி நீரை குடித்து வருகிறோம். அதேபோல் மற்ற கிராமங்களிலும் சிரமப்படு கின்றனர். ஆனால், குழாய் உடைப்பை சரிசெய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT