இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் சென்னை சர்வதேச திரைப்பட விழா 15 ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து இந்த திரைப்பட விழா ஜனவரி 5-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னையிலுள்ள உட் லாண்ட்ஸ் திரைப்பட வளாகம், ஐநாக்ஸ் திரையரங்கம், கேஸினோ, ரஷ்ய கலாச்சார மையம் மற்றும் ஆர்கேவி திரைப்பட மற்றும் தொலைக் காட்சி கல்வி நிறுவனம் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன.