தமிழகம்

சென்னை - நெல்லை இடையே சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கம்: முன்பதிவு இன்று தொடக்கம்

செய்திப்பிரிவு

கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை எழும்பூரில் இருந்து திருநெல் வேலிக்கு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எழும்பூர் - திருநெல்வேலி

சென்னை எழும்பூரில் இருந்து வரும் 16, 30-ம் தேதிகளில் இரவு 9.05 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06001) மறுநாள் காலை 10.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். இதேபோல, திருநெல்வேலியில் இருந்து 18, 27-ம் தேதிகளில் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06002) மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி

எர்ணாகுளத்தில் இருந்து, வரும் 15, 22, 29-ம் தேதிகளில் இரவு 8.15 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் (06016) மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங் கண்ணியை சென்றடையும். இதே போல, வேளாங்கண்ணியில் இருந்து, வரும் 16, 23, 30-ம் தேதிகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06015) மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 4-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.

ரூபாய் நோட்டு விவகாரத்தால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பலர் ஆன்லைன் மூலம் டிக்ெகட் முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT