தமிழகம்

என்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ - கருணாநிதி புகழஞ்சலி

செய்திப்பிரிவு

பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் என்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ என்று திமுக தலைவர் கருணாநிதி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

சோவின் மறைவு குறித்து இன்று கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''தமிழகத்தில் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நகைச்சுவை கலந்து எழுதக் கூடிய அரசியல் விமர்சகருமான நண்பர் சோ- ராமசாமி இன்று காலை மறைந்து விட்ட செய்தியினைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன் .

பல்வேறு அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கிடையிலும் என்னிடம் தனி அன்பும் பாசமும் கொண்டவர் சோ. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT