தமிழகத்தில் இதுவரை 6.49 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் எண் பெறாதவர்களுக்காக 301 இடங்களில் ஆதார் உதவி மையங் கள் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 28 வரை செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்கும் பணியை பாரத மின்னணு நிறுவனம் (பெல்) கடந்த 2011-ல் தொடங்கியது. இதற்காக தமிழகம் முழுவதும் 545 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 18.6.2011 முதல் 30.9.2016 வரையிலான கால கட்டத்தில் 7.09 கோடி ஆதார் பதிவுகளை பெற்று அதில் 6.49 கோடி பேருக்கு ஆதார் எண்கள் பாரத மின்னணு நிறுவனம் மூலமாக (பெல்) வழங்கப்பட்டுள்ளன. நிரந்தர ஆதார் பதிவுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.
ஆதார் எண் அல்லது அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் மீண்டும், மீண்டும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களுக்கு செல்வதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆதார் எண் பெறுவதற்கு ஒருமுறை பதிவு செய்தாலே போதும்.
இதுவரை ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள், ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் மீண்டும் பெறுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக, அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 285 மையங்களையும், சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவல கங்களில் 15 மையங்களையும், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஒரு மையத் தையும் என மொத்தம் 301 இடங் களில் சிறப்பு மையங்களை அமைத்துள்ளது.
இம்மையங்கள் இன்று தொடங்கி வரும் 2017 பிப்.28-ம் தேதி வரை செயல்படும். இந்த மையங்களில் ஏற்கெனவே ஆதார் எண்ணுக்கு பதிவு செய்துவிட்டு ஆதார் அட்டை கிடைக்கப் பெறா தவர்கள் அல்லது தொலைத்த வர்கள் நேரில் சென்று பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு, கைவிரல் ரேகை, கருவிழிகளைப் பதிவு செய்து சில விநாடிகளில் ஆதார் எண்ணை தெரிந்து கொள்ளலாம்.
அந்த ஆதார் எண்ணை அருகில் உள்ள இ-சேவை மையங் களில் தெரிவித்து ரூ. 30 செலுத்தி ஆதார் பிளாஸ்டிக் அட்டையா கவோ அல்லது ரூ.10 செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.