பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காவலர் மீது ஆசிட் வீசிச்சென்ற மர்ம நபர் களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்துள்ளதாக காவல் கண் காணிப்பாளர் பகலவன் தெரிவித் தார்.
வேலூர் ஆயுதப்படை 10-வது பட்டாலியனில் காவலராக இருப்பவர் லாவண்யா(26). இவர், திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தற்காலிக நியமனம் அடிப்படையில் பணி யாற்றி வருகிறார். லாவண்யா நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு காந்தி ரோடு வழி யாக வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் லாவண்யா மீது ஆசிட் வீசிவிட்டு தப்பினர்.
முகம் மற்றும் கைகளில் ஆசிட் பட்டதால் வலியால் துடித்த லாவண் யாவின் குரல் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். படுகாய மடைந்த அவரை மீட்டு திருப் பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், ஆசிட் வீச்சால் கண்கள் பாதித்திருக் கலாம் என்பதால் வேலூர் சிஎம்சி கண் மருத்துவமனைக்கு மாற்றப் பட்டார்.
இதுகுறித்து லாவண்யாவின் தந்தை தண்டபாணி திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ஆசிட் வீசப்பட்ட இடத்தில் தடய அறிவி யல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
லாவண்யாவிடம் இருந்த 3 செல்போன் மற்றும் 6 சிம்கார்டு களை போலீஸார் கைப்பற்றி உள் ளனர். அதில், லாவண்யாவுடன் கடைசியாக பேசியவர்களின் விவ ரங்களை சேகரித்து விசாரிக்கின் றனர்.
இந்த சம்பவம் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘ஆசிட் வீச்சு சம்பம் குறித்து லாவண்யாவிடம் விசாரணை நடத்தினேன். அவரது சொந்தப் பிரச்சினை காரண மாகவே ஆசிட் வீச்சு சம்பவம் நடந் துள்ளதாக தெரிகிறது. பேட்டரி யில் பயன்படுத்தப்படும் ஆசிட்டை வீசியுள்ளனர். இந்த வகையான ஆசிட் பெட்ரோல் நிலையம், பேட்டரி கடைகளில் விற்கப்படும். எனவே, ஆசிட்டை வாங்கியவர்கள் யார் என்பதை விசாரிக்கிறோம்.
ஆசிட் வீச்சால் லாவண்யாவின் ஒரு கண்ணில் பார்வை சரியாக தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் 3 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது’’ என்றார்.