ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கடத்திவரப்பட்ட 32 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினர் எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று பறிமுதல் செய்தனர்.
நேற்று ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து சர்க்கார் விரைவு ரயில் சென்னை எழும்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒருவரை சந்தேகத்தின் பெயரில் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பைகளை சோதனையிட்ட போது, அதில் 32 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
அதனை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த இளைஞர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சரண்(24) என்றும், ஆந்திராவில் இருந்து கஞ்சாவை மொத்தமாக கடத்தி வந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.