மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஜனவரியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 உறுப்பினர் களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மேற்கண்ட நியமனங்கள் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு அமைய வில்லை என்ற அடிப்படையில் அவற்றை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக்குழு உறுப்பினர் நிய மனங்கள் முறையாக நடைபெறவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வரையறுக்கப் பட்டுள்ள விதிகளுக்கு உட்பட்டு, அரசியல் விருப்பு, வெறுப்புகளின்றி நியமனம் செய்து தேர்வாணையத்தை வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்த முன்வர வேண்டும்.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சசிகலாவை சந்தித்து அவர் தலைமையேற்க முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளதாக பத்திரிகைகளில் புகைப்படங்களுடன் வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே, தமிழக அளுநர், இத்தகைய துணைவேந்தர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.