மத்திய அரசு பணமதிப்பு நீக்க அறிவிப்பால் பணம் எடுப்பதில் மக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில் ‘வார்தா’ புயல் காரணமாக பெரும்பாலான வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. திறக்கப்பட்ட ஒரு சில வங்கிகளும் அரைநாள் வரை மட்டுமே செயல்பட்டன. நேற்று மீலாது நபி திருநாளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டதால் பொதுமக்கள் பணம் எடுக்க ஏடிஎம் மையங்களுக்கு சென்றனர். ஆனால், புயல் பாதிப்பு களால் மின் தடை ஏற்பட்டதால் ஏடிஎம் மையங்களும் செயல்படவில்லை. இதனால், அவசரத் தேவைக்குகூட பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.