தமிழகம்

செங்கல்பட்டு அருகே திம்மாவரம் ஊராட்சியில் உள்ள நீஞ்சல் மடு அணை ‘ஷட்டர்’ உடைப்பு: காவல் நிலையத்தில் பொதுப்பணித்துறை புகார்

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு அடுத்த திம்மா வரம் ஊராட்சியில் நீஞ்சல் மடு அணையை சமூக விரோதிகள் உடைத்து தண்ணீரை வெளி யேற்றிதாக பரபரப்பு ஏற் பட்டுள்ளது. இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளனர்.

ஏரிகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் திகழ்கிறது. இங்கு பொதுப் பணித் துறையின் கட்டுப் பாட்டில் 912 ஏரிகள் உள்ளன. ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 1,083 ஏரிகள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், ஆத்தூர் ஆகிய வட்டங்களில் உள்ள ஏரிக ளிலிருந்து வெளியேறும் உபரி நீர், தென்னேரியில் கலந்து அங்கிருந்து செங்கல்பட்டு நகரை யொட்டிச் செல்லும் நீஞ்சல் மடு அணைக்கு வருகிறது. பின்னர் இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் பயணித்துப் பழவேலி கிராமத்தில் பாலாற்றில் கலக்கிறது. இதன் மூலம் 5200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இதன்படி செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் ஊராட்சியில் உள்ள நீஞ்சல் மடு அணை இப்பகுதி உள்ள நீராதாரங்களில் முக்கியமானது. கடந்த 7 வருடம் முன்பு ரூ. 11 கோடியில் இந்த நீஞ்சல் மடு அணை கட்டப்பட்டது. தென்னேரி, வடகால், வாலாஜாபத், போன்ற பகுதியில் உள்ள ஏரியில் இருந்து வெளியேறும் இந்த உபரி நீரை நீஞ்சல் மடு அணை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டு பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான பொன்விளைந்த களத்தூர் ஏரிக்கு நீர் அனுப்பப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் வார்தா புயலில் இந்த அணை நிரம்பி அருகில் உள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்புப் பகுதியில் நீர் புகுந்தது.

தடுப்புச் சுவர்

இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள் நீரில் மிதந்தன. அணை கட்டிய நாளில் இருந்து இப்பிரச்சினையால் பாதிக்கப்படுவதாகவும் எனவே அணையைச் சுற்றி தடுப்புச் சுவர் கட்டி தண்ணீர் வருவதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதை வலியுறுத்தி கடந்த மாதம் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களிலும ஈடுபட்டனர்.

இந்நிலையில் திடீரென நீஞ்சல் மடு அணையின் ஷட்டர் உடைக்கப்பட்டு நீரை வெளி யேற்றியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பொதுப்பணித்துறை சார்பில், செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘பொதுப்பணித்துறை அனுமதி இல்லாமல் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த சிலர் அணையின் ஷட்டரை உடைத்து தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். இதனால், பாசனத் துக்காக தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேறியது. மேலும் அணையின் ஷட்டரும் சேத மடைந்துள்ளது. எனவே அணையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அந்தப் புகாரில் கூறப் பட்டுள்ளது.

இது தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து நீஞ்சல் மடு அணையை உடைத்து சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT