மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடல்நிலை மோச மான நிலையில் இருந்தபோதும், மருத்துவமனையில் இருந்து வெளிவந்து தமிழக மீனவர்கள் பிரச்சினைக்காக கடந்த நவம்பர் 5-ம் தேதி இந்திய-இலங்கை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு, மீனவர்களின் பிரச்சினை களுக்கான தீர்வுகாண முதல் படியை உருவாக்கினார். மீண்டும் மருத்துவ மனைக்குச் சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த உடனேயே மீனவர்கள் கோரிக்கையை ஏற்று சுஷ்மா ஸ்வராஜ் எடுத்த நடவடிக்கையால், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி விடுதலை செய்ய அந்நாடு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மட்டற்ற மகிழ்ச் சியையும், இதயப்பூர்வமான நன்றியையும் தெரிவித்துக் கொள் கிறோம்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.