தமிழகம்

்ஃபோர்மேன், தொழில்நுட்ப பணிக்கு டிசம்பர் 15-ல் சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.ஷோபனா நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய ஜெனரல் ஃபோர்மேன் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 3-ம் தேதி நடைபெற்றது. அதில் மொத்தம் 900 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக் கீட்டு விதி மற்றும் அப்பதவி களுக்கான அறிவிக்கையில் வெளி யிடப்பட்ட பிற விதிகளின் அடிப் படையில், நேர்காணல் தேர்வுக்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட 24 விண் ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15-ம் தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

SCROLL FOR NEXT