என்ஐஏ குழுவைத் தொடர்ந்து, கேரள மாநில போலீஸார் மதுரையில் முகாமிட்டு நீதிமன்ற வளாக குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், மைசூரு நீதி மன்ற வளாகத்தில் கடந்த ஆகஸ் டில் குண்டுவெடிப்பு நடந்தது. இது தொடர்பாக, மைசூரு போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த செப்.20-ம் தேதி, இந்த வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மாற்றப்பட்டது. இதன் விசாரணை யில் ஹைதராபாத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவத்துக்கும், மைசூரு நீதிமன்ற குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் ஆந்திரா மாநிலம் சித்தூர், நெல்லூர், கேரளா மாநிலம் மலப்புரம், கொல்லம் நீதிமன்ற வளாகங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் ஒரே கும்பலே இந்தச் சதிச் செயலில் திட்டமிட்டு ஈடுபட்டிருக்கலாம் என என்ஐஏ போலீஸ் சந்தேகித்தது.
குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் சென்னை, மதுரையில் பதுங்கி இருக்கலாம் என கண்காணித்தனர். என்ஐஏ எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலை மையிலான போலீஸ் குழுவினர், மதுரையில் முகாமிட்டு கண்காணித் தனர். அப்பாஸ் அலி, கரீம்ராஜா, அயூப் அலி, சம்சுதீன் ஆகியோரும், மதுரையைச் சேர்ந்த பொறியாளர் தாவூத் சுலைமான் சென்னையிலும் பிடிபட்டனர். மைசூரு நீதிமன்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களைக் கைது செய்த என்ஐஏ போலீஸ் பெங்களூ ருக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கடந்த நவ.1-ல் கேரளா மலப்புரம் நீதிமன்ற வளா கத்தில் கழிப்பறையில் குண்டு வெடித்த சம்பவத்தில் இந்த 5 பேருக் கும் தொடர்பு இருப்பதாக என்ஐஏ போலீஸ் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து, மதுரையில் கடந்த 2 நாட்களாக கேரளாவைச் சேர்ந்த போலீஸ் குழுவினர் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டு சந்தேக நபர் கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “என்ஐஏ குழு விசாரணையில், அப்பாஸ் அலி உட்பட 5 பேருக்கும் மலப்புரம் நீதிமன்ற வளாக குண்டு வெடிப்பு சம்பவத்திலும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க, அந்த காவல்நிலைய எஸ்ஐ.க்கள் பாபு அப்துல்லா, பினு ஆகியோர் தலைமையில் ஒரு குழுவினர் மதுரை வந்துள்ளனர். அவர்கள், மதுரையில் கைதான 5 பேரின் வசிப்பிட பகுதிக்குச் சென்று விசாரிக்கின்றனர்” என்றார்.