முதல்வர் மு.க.ஸ்டாலின் | கோப்புப் படம் 
தமிழகம்

அரசியலமைப்பின் விழுமியங்களை உயர்த்திப் பிடித்து நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்: முதல்வர் ஸ்டாலின்

செய்திப்பிரிவு

சென்னை: அரசியலமைப்பின் விழுமியங்களை உயர்த்திப் பிடித்து நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில்," சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதிகொள்வோம்" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT