தமிழகம்

சேகர் ரெட்டியின் ஆடிட்டர், கூட்டாளிகள் இருவர் கைது- ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணை

செய்திப்பிரிவு

ரூ.34 கோடிக்கு புதிய 2000 நோட்டுகள் பதுக்கல்

தொழிலதிபர் சேகர் ரெட்டி ரூ.34 கோடி மதிப்பில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை முறைகேடாகப் பெற்ற வழக்கில் அவரது ஆடிட் டர், 2 கூட்டாளிகளை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

பொதுப்பணித் துறை ஒப்பந்த தாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி ஆகியோரது வீடுகளில் வருமானவரி, அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 8-ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் சோதனை நடத்தினர். சென்னை மற்றும் வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் ரூ.147 கோடி ரொக்கம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மட்டும் ரூ.34 கோடி மதிப்பிலானவை. இந்த புதிய நோட்டுகளை 24 நாட்களில் இவர்கள் மாற்றியுள்ளனர். ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டைப் பெறு வதற்கு வங்கிகள், ஏடிஎம்களில் சாமானிய மக்கள் மணிக்கணக்கில், நாள்கணக்கில் காத்திருக்கும் நிலை யில், இவர்கள் பல கோடி மதிப் பிலான புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தது அதிர்ச் சியை ஏற்படுத்தியது.

இவர்களுக்கு புதிய நோட்டுகள் எப்படி கிடைத்தன என்பது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தியது. சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோர் வங்கி அதிகாரிகளின் உதவியுடன் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை முறை கேடாகப் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 409, 420, ஊழல் தடுப்புச் சட்டம் 13(2), 13(1) பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர்களிடம் சிபிஐ டிஎஸ்பி சோமையா, ஆய்வாளர் நாகேஷ் வரன் தீவிர விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் முறைகேடாக பணம் பெற்றிருப்பது உறுதிசெய் யப்பட்டது. இதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் புதிய ரூபாய் நோட்டு களை முறைகேடாகப் பெறுவதற்கு சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம் குமார், கூட்டாளிகள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோர் உதவி செய்தது சிபிஐயின் தொடர் விசாரணையில் தெரிந்தது. இதை யடுத்து, அவர்கள் 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை கைது செய்தனர். 3 பேரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் நேற்று மதியம் ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேரையும் ஜனவரி 4-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ஜி.விஜயலட்சுமி உத்தர |விட்டார். இதையடுத்து, அவர் கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

5 பேர் தரப்பில் ஜாமீன் மனு

இதற்கிடையில், சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேர் தரப்பிலும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடக்கிறது. சிறையில் முதல் வகுப்பு கேட்டு சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரிக்கப்படுகிறது. சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டியை 15 நாட்களும், பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரை 5 நாட்களும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT