தமிழகம்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது என எச்சரித்து மீனவர்களின் படகுகளை விரட்டி அடித்தனர். இதனால், அச்சமடைந்த மீனவர்கள் மீன்பிடிக்காமலேயே ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

இதற்கிடையே, இலங்கை கடற்படையினர் தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் கடலோரக் காவல்படையினருக்கு அனுப்பிய வீடியோவில், ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க நுழைவதும், அதன் அருகில் இருக்கும் இலங்கை கடற்படை ரோந்து படகின் ஜீபிஎஸ் மற்றும் ராடார் பதிவுகளும் வெளியாகி உள்ளன.

          
SCROLL FOR NEXT