லட்சத்தீவு அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலைகொண்டிருப்ப தால் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்றும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்ற ழுத்த தாழ்வு நிலை உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஸ்டெல்லா நேற்று கூறியதாவது:
நேற்று உள் தமிழகத்தில் இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம். கடலில் கொந்தளிப்பு எதுவும் இருக்காது என்பதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்படவில்லை.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
புதிய காற்றழுத்த தாழ்வு
இதற்கிடையில், இந்தோ னேசியாவின் சுமத்திரா தீவு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதி யில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், தொடர்ந்து வரும் 48 மணி நேரத்தில் வலுப்பெற்று, காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக வும் மாறும் என்று எதிர்பார்க் கப்படுகிறது. அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, விருதுநகர், காஞ்சிபுரம் மாவட்டம் கொளப் பாக்கத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.